குஜராத் தேர்தலில் எலும்பும் தோலுடன் இலங்கை குழந்தையின் படம்

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டமாக நடைபெற இருக்கிறது. 87 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 13-ம் திகதி நடைபெற உள்ளது. மீதம் உள்ள 95 தொகுதிகளுக்கு 17-ந் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே பல தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகின்றது.

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக களம் இறங்கியுள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தில் நவீன யுக்தியை கையாண்டு வருகிறார். ஒரே நேரத்தில் 4 பிரசார கூட்டங்களில் 3-டி தொழில் நுட்பத்தில் வீடியோ காண்பிரன்சிங் மூலம் மோடி செய்து வரும் பிரசாரம், பா.ஜ.க. தொண்டர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் முழுவதும் பா.ஜ.க. தேசிய தலைவர்களை வைத்து 87 இடங்களில் பிரமாண்ட தேர்தல் பிரசார பேரணிகளை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதையொட்டி தெற்கு குஜராத் சவுராஷ்டிரா பகுதிகளுக்க உட்பட்ட 55 இடங்களில் நேற்று பிரமாண்ட பேரணிகள் நடைபெற்றன.

இந்த பேரணிகளில் பாராளுமன்ற மேல் சபை எதிரிக்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, பா.ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, பா.ஜனதா தேசிய துணை தலைவர் புருஷோத்தம் ருபலா, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ஜார்கண்ட் முதல்-மந்திரி அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் இவ்வேளையில் மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி பா.ஜ.க.வும், ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் பலியாகும் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியும் பிரசார ஆயுதங்களாக பயன்படுத்துகின்றன.

குஜராத் மாநிலத்தில் 45 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுள்ளதாக காங்கிராஸ் கட்சி, தேர்தல் பிரசார சுவரொட்டிகளை குஜராத் மாநிலம் முழுவதும் ஓட்டியுள்ளது. இது தவிர, மாற்றம் ஏற்படுத்த ‘கை’ கோர்ப்போம் என்ற தலைப்பில் நேற்றைய நாளிதழ்களிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

இதில், எலும்பும் தோலுமாக ஒரு குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம், தற்போது குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குழந்தையின் புகைப்படம் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, எடுக்கப்பட்டது என்றும், அந்த புகைப்படம் வெளியான இணையதளத்தின் முகவரியையும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி மிகமோசமான பிரசார யுக்தியை கையாள்கின்றது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் செய்துவரும் பொய் பிரசாரம் அடிப்படை ஆதாரம் இல்லாதது. குஜராத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் செய்துவரும் பொய் பிரசாரத்திற்கு இந்த புகைப்பட ஆதாரம் ஒன்றே போதும் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஜகதீஷ் பவ்சர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply