2013ஆம் ஆண்டு பெப்ரவரியில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்

தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததன் பின்னர், மேல் மாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகாரசபை, அடுத்த வருடத்துக்கான வழித்தட அனுமதி கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக கூறியுள்ளது. இதன்படி ஆண்டுக்கான வழித்தடக் கட்டணம், 3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பஸ் நிலைய சேவைகளுக்கான மாதாந்த கட்டணம் 600 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகவும் பஸ்களின் உரிமையை மாற்றிக்கொடுப்பதற்கான கட்டணம் 60 ஆயிரம் ரூபாவிலிருந்து  ஒரு இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்படும்.

இதேவேளை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : ஒலி-ஒளி செய்திகள்


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply