தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் 23 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எழுதியது. சில தகவல்கள் இச்சந்ததிக்கு போய்ச் சேரவேண்டும் என்கிற துடிப்பில் எழுதப்பட்டது

1931 மார்ச் 05 இல் பிறந்தார். தந்தை -அம்பலப்பிபிளை கதிரிப்பிள்ளை (விவசாயி)- தாய்-தெய்வானைப்பிளளை.  ஆரம்ப கல்வி கொலங்கலட்டி சேர் கனகசபை வித்தியாசாலை, பின்னர் கொழும்பு சென் ஜோசெப் கல்லூரி,பின்னர் இலவாலை சென் ஹென்ரீஸ்.191948 இல் காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியல் தொழில் நுட்பப் பயிலுனராக இணைந்தார்.

 அதே ஆண்டில் மார்க்சியச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசியல் செயற்பாட்டாளரானார்.(பாசையூர் சந்தியாப்பிள்ளை மூலம் இந்திய மார்க்சிய நூல்களையும், ப. ஜீவானந்தம்,ஜனசக்தி பத்திரிகையும்  வாசிக்க ஆரம்பித்தார் .1949 இல் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.   1962 இல் திருமணம். மனைவி வள்ளியம்மை.(ஆசிரியர்) காதல்+கலப்பு திருமணம். தாலியாக அரிவாள்,சம்மட்டியைக் கட்டினார்.  சத்தியராஜன் 1962 , சத்தியமலர் 1964,சத்தியகீர்த்தி 1966 என மூன்று பிள்ளைகள்.  1963 இல் வடபிரதேச வாலிபர் சங்கச் செயலாளர்.1964 இல் பிளவின் பின்னர் சண்முகதாசன் தலைமையில் உள்ள கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.1966 ஒக்டோபர் 21எழுச்சி ஊர்வலம் சுண்ணாகத்திலிருந்து யாழ் நகர் நோக்கி இவர் தலைமையில் முன்னேறியபோது,பொலீசாரின் கடும் தாக்குதலுக்கு இலக்காகியதோடு கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலையானார்.மட்டுவில் பன்ரித்தலைச்சி ஆலயப் பிரவேச வெற்றியின் பின்னர் மோகனதாஸ் சமூக நிலையத்தில் எஸ்.டி பண்டாரனயக்காவின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழிபெயர்த்தவர் இவரே.
1967 இல் அல்பேனியாவில் நடைபெற்ற வாலிபர் அமைப்பு மாநாட்டில் இலங்கை கொம்யூனிஸ்ட் வாலிபர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அங்கு ரோகண விஜவீரவும் கலந்துகொண்டார்..1969 மே தினம் அன்று பௌத்த வெசாக் தினம் என்பதால் ஐ.தே.க. அரசு தொழிலாளர் தினத்தை வேறொரு நாளில் கொண்டாட உத்தரவிட்டது; உத்தரவை நிராகரித்த கட்சி அதே நாளில் மேதினத்தை நடாத்த முடிவு செய்டது. கே.ஏ.சுப்பிரமணியம் தலைமையில் யாழ் நகரில் ஊர்வலம். இவர் போலீசாரல் மிக மோசமாகத் தாக்கப்பட்டுக் கைதான போதிலும் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது(கலந்து கொண்ட மக்கள் சக்தியை நகர காவலரால் சம்மாளிக்க இயலாமையே காரணம்).

1963, 1967, 1975, 1979 ஆகிய வருடங்களில் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்கு சென்றார்.

1978 இல் சண் தலைமை சுயநிர்ணயத்தை ஏற்காமை, மூன்றுலகக் கோட்பாட்டை நிராகரிப்பது என்ற முடிவைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்ற மத்திய குழு முடிவை மீறி சண் பகிரங்க அறிக்கை வெளியிட்டது என்கிற காரணங்களால் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி  இலிருந்து வெளியேறி இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (இடது) இவர் தலைமையில் உருவாகியது. பின்னர் புதிய ஜனநாயகக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது (புதிய ஜனநாயக மாக்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி என்ற பெயரில் இன்று இயங்குகிறது).

 1974 இல் தேசிய கலை இலக்கியப் பேரவை உருவாக காரண கர்த்தா இவரே. சில்லையூர் செல்வராசன்,டானியல், என்.கே.ரகுநாதன் போன்றோருடன் இதற்கென கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டார்.பேரவைக்கு கைலாசபதி, முருகையன் ஆகியோரது முழுமையான ஒத்துழைப்பைப் பெறுவதற்கு இவர் பிரதான காரணி. பேரவையின் சஞ்சிகையாக “தாயகம்” வெளிப்பட இவரது வழிகாட்டல் முக்கிய பங்கு வகித்துள்ளது; மட்டுமன்றி, தவிர்க்க இயலாத மூன்று சந்தர்ப்பங்கள் தவிர, ஏனைய அனைத்து ஆசிரிய தலையங்கங்களையும் தாயகத்துக்கு உயிரோடு இருந்த காலம் முழுமையும் அவரே எழுதினார்.இனப்பிரச்சனை தொடர்பான சிறு பிரசுரம் (சின்னத்தம்பி என்ர பெயரில்) உட்பட அவரது எழுத்தாக்கங்கள் குறைந்த அளவிலேனும் உண்டு; மூன்றுலகக் கோட்பாடு தொடர்பிலான அவரது ஆக்கம்(1978) விதந்துரைக்கத்தக்கது. இவை நூலுருப்பெறாமை துரதிர்ஸ்டம்; விரைவில் வெளிவரும் என நம்பலாம்.

1989 நொவெம்பர் 27 அன்று கண்டி அரச வைத்தியசாலையில் மரணம். யாழ்ப்பாணம்-சுழிபுரம்”சத்தியமனை” எங்கிற அவரது எளிமையான ?சிறு வீட்டில்  கொண்டுவரப்பட்ட அவரது புகழுடல் ஏராளமான மக்களது அஞ்சலிக்குப் பின்னர் திருவடிநிலை மயானத்தில் அக்கினியோடு கலந்தது. தனது இறுதி நிகழ்வு “விடை பெறுகிறேன்” என்று இருக்கவெண்டும் என்று வலியுறித்தியதோடு,சமய சம்பிரதாயங்கள் கடந்து அது நடைபெறவும் வலியுறித்தினார்.

1971 ஏப்பிரல் கிளர்ச்சி தொடர்பாக உட்படப் பல சந்தர்ப்பங்களில் அரச படையின் தேடுதல் காரணமாகத் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டவர், இறுதிக் காலத்தில் வலது சாரித் தமிழ்த் தேசியப் பாஸிஸம் காரணமாக கண்டியில் தலமறைவை மேற்கொண்டமையால் அங்கு தனது இறுதி மூச்சை செயலாக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.1989     டிசெம்பரில் வெளியான “விடைபெறுகிறேன்” என்ற அவரது நினைவேட்டில் சிறீமாவோ பண்டாரநாயக்க, எஸ்.டி.பண்டாரநாயக்க உட்படப் பலர் எழுதியிருந்த நினைவுக்குறிப்புகள் மிகுந்த கவனிப்புக்குரியன.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply