ஜனாதிபதி நாடு திரும்பினார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கசகஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார். கந்த 19 ஆம் திகதி கசகஸ்தானுக்கு சென்ற அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்வையிடுவதற்காக கடந்த 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை பிரதமர் டி.எம். ஜயரட்ன 3.30 மணியளவில் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply