ஈராக் கார் குண்டு வெடிப்பில் 30 பேர் பலி

கலவர பூமியாக அறியப்பட்ட ஈராக்கில் அமைதியை ஏற்படுத்தி, புதிய ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வதற்காக, அமெரிக்க ராணுவம் கடந்த சில ஆண்டுகளாக ஈராக்கில் முகாமிட்டு இருந்தது. சென்ற ஆண்டு ஈராக்கிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. சில ஆண்டுகளாக ஈராக்கில் நீடித்து வந்த அமைதி, அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்ட பின்னர், அரிபொருளாகி விட்டது. அந்நாட்டில் வாழும் ஷியா, சன்னி பிரிவினருக்கிடையே சமீபகாலமாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாக்தாத் நகரில் உள்ள ஷியா மசூதிகளை குறிவைத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

ஹுரியா பகுதியில் உள்ள மசூதியின் அருகே நேற்று மாலை திடீரென்று ஒரு கார்குண்டு வெடித்தது. இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் கயரியேட் மசூதி அருகேயும் கார்குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மூன்றாவதாக வடக்கு பாக்தாத், ஷுலா என்ற இடத்தில் உள்ள மசூதி அருகே மீண்டும் ஒரு கார்குண்டு வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள், சில வருடங்களுக்கு முன் ஈராக்கில் காணப்பட்ட பயங்கரமான இருண்டகாலத்தை நினைவுப்படுத்துவதாக பாக்தாத்வாசி ஒருவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply