ஜப்பான் 3.7 மில்லியன் ரூபா நன்கொடை
செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் வேலைத்தளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான இயந்திரங்கள் கொள்வனவிற்கு ஜப்பானிய அரசாங்கம் சுமார் 3.7 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. இவங்கையில் மேற்கொள்ளப்படும் சமூக நலன்புரி செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கொழும்பில் செயற்கை உறுப்புகள் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான வேலைத்தளங்களை அமைக்கும் திட்டம் கொழும்பு தேவைக்கு உதவும் சங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் வருடாந்தோறும சுமார் 1,000 பேருக்கு இலவசமாக செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுகின்றனர்.
இந்த உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள கொழும்பு தேவைக்கு உதவும் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபி கொழும்பு தேவைக்கு உதவும் சங்கத்தின் தலைவி கல்யாணி ரணசிங்கவிடம் உபகரணங்களை கையளித்தார்.
இந்த உதவியின் ஊடாக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு மக்களிற்கு இடையிலான உறவு அதிகரிக்கும் என ஜப்பான் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply