நாடளாவிய ரீதியில் வேலைவாய்பு மையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை
வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை நாடிச் செல்பவர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தொழில்வள மத்திய நிலையங்களை நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, 50 தொழில்வள மத்திய நிலையங்கள் நாடளாவிய ரீதியாக செயற்பட்டு வருகின்றன. இதனூடாக வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு தேவையான மொழிப் பயிற்சி மற்றும் தொழிற்பயிச்சிகளை முறையாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 24 ம் திகதி மத்துகமவில் புதிய வெளிநாட்டு தொழில்வள மத்திய நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply