ஹெரோயின் வைத்திருந்த பெண்ணிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விமல் நம்புவசம் இந்த தீர்ப்பினை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 385 கிராம் ஹெரோயினுடன் குறித்த பெண் 6 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதனையடுத்து 33 வயதான குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply