இந்திய மீனவர்கள் அத்துமீறல்களை நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்! யாழ். மீனவர்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (29) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ். நகரில் நடைபெற்றது. யாழ். ஜோன் .பெஸ்கோ பாடசாலை முன்றலில் ஆரம்பித்த பேரணி இந்திய துணைத்தூதரகம் வரை சென்று அங்கு இந்தியத் துணைத்தூதுவரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேரணி யாழ். பிரதேச செயலகத்தை சென்றடைந்தது அங்கு மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அப்பொழுது மீனவர்கள் இன்னமும் 15 நாட்களுக்குள் இந்த அத்துமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரியளவிலான போராட்டங்கள் வெடிக்கும் எனத் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply