ஷிராணி எதிரான நடவடிக்கைகளை கைவிடுமாறு பௌத்த பீடாதிபதிகள் கோரிக்கை
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றஞ்சாட்டி பதவியிறக்குவதற்கான நடவடிக்கைகளை கைவிடுமாறு இலங்கையின் முக்கியமான நான்கு பௌத்த பீடாதிபதிகளும் ஜனாதிபதியை கோரியுள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மல்வத்தை, அஸ்கிரிய, ராமன்ய மற்றும் அமரபுர பீடாதிபதிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றஞ்சாட்டும் பிரேரணை நீதித்துறையின் அனைத்து கிளைகளுக்கும் பாதகமாக அமையும் என்று பெரும்பான்மையான மக்கள் கருதுவதாக தமது கடிதத்தில் கோரியுள்ள பீடாதிபதிகள்இ நீதித்துறையின் சுதந்திரத்தை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்றும்இ மக்களின் மனதில் நீதித்துறை குறித்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
இதன் மூலம் அரசாங்கத்தினால் மக்களின் மனதில் ஒரு திருப்தியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுளனர்.
இந்த குற்றஞ்சாட்டும் பிரேரணை காரணமாக நாட்டில் சட்டம் தளர்ந்து போவதையும் சமூகம் பாதிக்கப்படுவதையும் தடுப்பதற்காக அந்த பிரேரணை வாபஸ் பெற வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கான தமது கடிதத்தில் கேட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் சில விடயங்களில் பௌத்த பீடங்களின் தலைவர்கள் இவ்வாறு கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும்இ இது ஒரு அரிதாக நடக்கும் நிகழ்வாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply