இலங்கையின் ஒத்துழைப்பிற்கு அவுஸ்திரேலியா பாராட்டு

சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கை அரசாங்கம் அளித்து வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.  சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.  சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுக்கும் நோக்கிலேயே அண்மையில் உயர்மட்டக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபியன் மொடி தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம், 23ம் திகதிகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்கள பிரதிச் செயலாளர் பீட்டர் வெர்டோஸ் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply