வன்னியில் நன்கு பயிற்சிபெற்ற 700 புலிகளும், ஆகக் கூடியது ஒரு இலட்சம் மக்களுமே இருக்கின்றனர் :உதய நாணயக்கார தெரிவித்தார்

வன்னியில் நன்கு பயிற்சிபெற்ற 700 புலிகளும், ஆகக் கூடியது ஒரு இலட்சம் மக்களுமே இருக்கின்றனர் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் அமைச்சில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வருகின்ற அப்பாவி பொதுமக்களை படையினர் நிராயுத பாணிகளாகவே தண்ணீர் கொடுத்து உபசரித்து வரவேற்கின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே தர்மபுரம் இடைத்தங்கள் முகாம் மீது தற்கொலைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் பொதுமக்களை வரவேற்கின்ற போது படையினர் மாற்று நடவடிக்கைகளை பின்பற்றுவர்.

தற்போதைய கணிப்பீட்டின் பிரகாரம் வன்னியிலிருந்து வவுனியா,யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்ற மக்கள் உள்ளடங்களாக வன்னியில் ஆக கூடியது ஒரு இலட்சம் பொதுமக்களும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 700 புலிகளே மீதமிருக்கின்றனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply