யாழ். பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து விரிவுரையாளர்கள் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிசாராலும் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று (30) பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது.  காலை 11 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலான ஒரு மணித்தியாலங்கள் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக முன்றலில் தமது போராட்டத்தை நடாத்தினார்கள். 

இந்த போராட்டம் பற்றி யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க தலைவர் ஆர். இராசகுமாரன் தெரிவிக்கையில்,

கடந்த 27 ம் திகதி இரவு பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் பெண் இராணுவமோ பெண் பொலிசாரோ இல்லாது இராணுவத்தினரும் பொலிசாரும் பல்கலைகழக நிர்வாகத்தின் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்துள்ளார்கள்.

இதனை கண்டித்து அடுத்த நாள் (28) மாணவர்கள் நடாத்திய போராட்டத்தை பொலிசார் அமைதியான முறையில் மாணவர்களை கலைக்க முற்படாமல் துணைக்கு இராணுவத்தினரையும் அழைத்து அவர்களை தாக்கியுள்ளார்கள்.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் அதேசமயம் இவ்வாறு இராணுவத்தினரும் பொலிசாரும் தொடர்ந்து பல்கலைக்கழக செயற்பாடுகளில் தலையிடுவார்கள் எனில் நாம் எமது போராட்டத்தை விரிவு படுத்துவோம் என தெரிவித்தார்.

அதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை அடுத்து மாணவர்கள் இரு தினங்களாக வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வரும் வேளையில் பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிசாரும் பல்கலைகழக சூழலில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply