கொலை விடுக்கப்படுகிறது – பாராளுமன்றத்தில் சிறிதரன்

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை அடிக்கடி அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதை தனக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தலாக தான் கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றில் இன்று (30) ஆற்றிய விசேட உரையில் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.  

´குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தொடர் விசாரணையால் நான் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். எமது மனைவி பிள்ளைகளும் மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது மக்களுக்கு பயமின்றி சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு உரிமை உள்ளது. ஆனால் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் மூலம் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் எமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்துமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் சிறிதரன் எம்பி கோரிக்கை விடுத்தார்.

இங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரச்சினை பெரிதாகியுள்ளதென தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply