அடுத்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐநாவில் மற்றுமொரு பிரேரணை – லக்ஷமன் கிரியெல்ல
எதிர்வரும் வருடம் மார்ச் மாதத்தில் இலங்கை சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 2013 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் வெளிவிவகார அமைச்சு தொடர்பில் இன்று (30) விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அடுத்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐநாவில் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கு காரணம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிள்குடியேற்றம், மனித உரிமை, ஊடக சுதந்திரம், 13வது திருத்தம் போன்ற விடயங்களில் சர்வதேசம் இலங்கை மீது நம்பிக்கை இழந்துள்ளதால் ஐநாவால் 200 பரிந்துரைகள் இலங்கை மீது முன்வைக்கப்பட்டதாக லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
கடந்த பிரேரணையின் போது 15 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இம்முறை அதில் கியூபா, ரஸ்யா, சீனா ஆகிய நாடுகள் இல்லை எனவும் மலேசியாவும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்தியாவுடன் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் டில்லியுடன் சேர்ந்து பயனில்லை எனவும் தமிழ்நாட்டுடன் சிறந்த உறவை பேண வேண்டும் எனவும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply