ஜனாதிபதி குடும்பத்தின் ஏகாதிபத்திய பயணத்துக்கு தடையாக இருக்கும் நீதித்துறையை நசுக்கும் முயற்சியே தற்போது அரங்கேறுகிறது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஏகாதிபத்திய பயணத்துக்கு தடையாக இருக்கும் நீதித்துறையை நசுக்கும் முயற்சியே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே அதனை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி நாடளாவிய ரீதியில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்கள் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வழங்கியுள்ள தீர்ப்பானது நாட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தெரிவுக்குழு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ள பாராளுமன்றம் இதற்கு பின்னர் உயர்நீதி மன்றம் முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் சட்ட விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாதா? என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
பொதுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குடும்ப நிர்வாகம் நாட்டில் மேற்கொள்ளும் ஏகாதிபத்திய பயணத்துக்கு தடையாக உள்ளவற்றை டோசர் இட்டு நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரை மக்களின் இறைமையும் ஜனநாயக உரிமையைம் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் மக்களின் இறைமையே பாராளுமன்றத்தில் உள்ளது. அதனை மதித்து நடக்க வேண்டும்.
2010 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய பாராளுமன்றத்தின் கட்டமைப்பில் மக்களின் இறைமை உள்ளதா என்ற கேள்ளி எழுகின்றது. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் 3/2 பெரும்பான்மையை இந்த அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. பெரும்பான்மையை இந்த அரசாங்கம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.
அந்தவகையிலேயே பாராளுமன்றத்திலும் யாரை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்க முடியும். பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர்மார்களில் ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்களே உள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply