அவுஸ்திரேலிருந்து 593 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து இதுவரை 593 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுகின்ற இலங்கையர்கள் தொடர்ந்தும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கிறிஸ்மஸ் தீவில் இருந்து மேலும் எட்டு குடும்பங்கள் இன்றைய தினம் பப்புவா நியுனியாவில் உள்ள மனுஸ் தீவின், அகதிகள் நடவடிக்கை மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த 28 பேர் இவ்வாறு மனுஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவன்  குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply