லஷ்மி மிட்டல்-பிரான்ஸ் அரசுக்கு இடையே இரும்பு ஆலைப்பிரச்சினையில் சுமூக ஒப்பந்தம்

உலகப்பணக்காரர்களில் ஒருவரான லஷ்மி மிட்டலுக்கு சொந்தமான பிரான்ஸ் இரும்பு ஆலைகளில் 20,000 பேர் வேலை பார்க்கின்றனர். உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவியதை தொடர்ந்து அந்நாட்டிலுள்ள புலோரன்ஸ் யூனிட்டில் வேலைபார்த்த 629 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதனால் பிரான்ஸ் அரசு அந்த ஆலையை கையகப்படுத்துவதாக அறிவித்தது. அதற்கு லஷ்மி மிட்டல் நிர்வாகம் நாங்கள் அனைத்து ஆலைகளையும் நிறுத்துவோம் என்று பதில் அளித்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே முரன்பாடுகள் நிலவி வந்தன.

இந்நிலையில், பிரான்ஸ் பிரதமர் பெர்னார்டு அயிரால்ட் மற்றும் லஷ்மி மிட்டலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் புலோரன்ஸ் யூனிட்டில் அடுத்த 5 வருடங்களுக்குள் 180 மில்லியன் யூரோ பணம் முதலீடு செய்வது மற்றும் அந்த 629 பேரை வேலையில் மீண்டும் சேர்த்துகொள்வது என உறுதியளித்ததை தொடர்ந்து இப்பிரச்சினை முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எங்களுக்கு விரும்பமில்லை என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply