தற்கொலை தாக்குதல் சிறுமி, பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் உயிரிழப்பு காயமடைந்த 40 பொதுமக்கள் வைத்தியசாலையில்
அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிக ளின் பிடியிலிருந்து தப்பி இராணுவத்தின ரிடம் தஞ்சமடைய வந்த சிவிலியன்களை இலக்குவைத்து புலிகளின் பெண் குண்டுதாரி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 8 பொதுமக்களும், அவர்களை நலன்புரி முகாம் களுக்கு அனுப்பும் பணியில் நிராயுதபாணிகளாக ஈடுபட்டிருந்த 20 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதுடன், 64 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு, சுதந்திரபுரத்தில் நேற்றுக் காலை 11.45 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
கொல்லப்பட்ட 20 இராணுவ வீரர்களில் பெண் படையினர் மூவரும், 8 சிவிலியன்க ளில் ஒரு சிறுமியும் அடங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், படுகாயமடைந்த 64 பேரில் 40 சிவிலியன்களும், 24 இராணுவ வீரர்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத் தில் நிராயுதபாணியாக இருந்த இராணுவ வீரர்களும், புலிகளின் பிடியில் சிக்கித் தவித்த எட்டு சிவிலியன்களுமே கொல்லப்பட் டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சிவிலியன்களை இலக்குவைத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்கவும் கலந்துகொண் டார். இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதியும், அரசாங்கமும் விடுத்த அறிவித்தலையடுத்து சிவிலியன்கள் வேகமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்த வண்ணமிருந்தனர்.
இந்த அடிப்படையில் நேற்றுக் காலையும், முல்லைத்தீவு சுதந்திரபுர பிரதேசத்தை நோக்கி சுமார் ஐயாயிரம் பொதுமக்கள் வருகை தந்தனர்.
இவ்வாறு வருபவர்களை வரவேற்கவென சுதந்திரபுரத்தில் பாதுகாப்புப் படையினரால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சகலரையும் சோதனை யிடுவதற்கும், பதிவு செய்துகொள்வதற்கும் என இருவரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கும் சின்னஞ் சிறார்களுக்கும் என தனியான வரிசை ஒன்றும், ஆண்களுக்கு தனியான வரிசை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களை வரவேற்க காத்திருக்கும் படையினர் நிராயுத பாணிகளாகவே கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பலர் பல நாட் களாக உண்ணாதவர்களாகவும், சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் கூட குடித்திருக்காதவர்களுமாகவே உள்ளனர். எனவே அவர்களை வரவேற்று சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் தகவல் பதிவுசெய்த பிறகு பஸ் வண்டிகள் மூலம் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
இந்த அடிப்படையில் நேற்றுக்காலை 5000 சிவிலி யன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தஞ்சமடையும் சிவிலியன் போன்றே பெண் தற்கொலை குண்டுதாரியும் வருகை தந்துள்ளார். பெண்களை சோதனையிடும் வரிசையில் வந்த அவரை இராணுவத்தின் பெண் வீரர் ஒருவர் சோதனையிட முற்பட்டபோதே தற் கொலை குண்டுதாரி தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த அப்பாவி தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக கொண்டு வரப்பட்டு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புலிகளின் பிடியிலிருந்து நாளுக்கு நாள் வேகமாக தப்பி வரும் பொதுமக்களின் வருகையை தடுத்து நிறுத்தும் பொருட்டே புலிகள் இது போன்ற மோசமான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இது போன்று புலிகளே சிவிலியன்களை இலக்குவைத்து பல தாக்குதல்களை நடத்திவிட்டு அதனை இராணுவம் செய்ததாக குற்றஞ்சாட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறி புலிகள் பொய்ப் பிரசாரம் செய்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எந்தவித சேதங்களும் இன்றி முழுமையாக இருப்பதை படையினர் படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply