ஏனைய ஜனாதிபதிகளால் சாதிக்க முடியாதவற்றை மஹிந்த சாதித்துள்ளர்:அமைச்சர் டளஸ்

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தலில் இரு மாகாணங்களிலுமுள்ள 40 தேர்தல் தொகுதிகளில் ஐ.ம.சு.முன்னணி 39 ஐ வெற்றிகொள்ளும் என இத்தேர்தல் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல்களை முன்னிட்டு ஐ.ம.சு.முன்னணி இன்று கொழும்பில்  ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும் நோக்கில் முப்படையினரையும் வழி நடத்திச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் சிறந்த பலன்களை அனுபவித்து வருகிறோம்.

புலிகளைத் தோற்கடிக்கும் நடவடிக்கையில் நாட்டில் ஆட்சி செய்த 4 ஜனாதிபதிகளினாலும் சாதிக்க முடியாதவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சாதித்துள்ளார். புலிகளைத் தோற்கடிக்கும் விடயத்தில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டுள்ள ஜனாதிபதி நேர்மையுடன் செயற்பட்டு வருகின்றார் எனவும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply