வன்னி மக்களுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து நிவாரணம் :முதலமைச்சர் சிவநேரதுரை சந்திரகாந்தன்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
 
கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் 6 பார ஊர்திகளில் நேற்று மாலை வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர், அவற்றை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிவாரணப் பொருள்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேரதுரை சந்திரகாந்தன் இடம்பெயர்ந்த மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், இறுதி நேரத்தில் அவர் வவுனியா செல்லவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்திருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான இடங்கள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்றப்பட்டுள்ளன. அரசாங்க கட்டடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகம் கல்வியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் அமைப்பினால் கூடாரங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதுஇவ்விதமிருக்க வவுனியாவில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 21 பேர் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply