பத்து நாட்களுக்குள் 30 ஆயிரம் சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை:பிரிகேடியர் உதய நாணயக்கார

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலிகளின் பிடியிலிருந்து தப்பி கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் சுமார் முப்பதாயிரம் சிவிலியன்கள் இராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஜனவரி மாதம் மாத்திரம் 3848 பொது மக்கள் வருகை தந்துள்ளதுடன், இத்தொகை கடந்த பத்து நாட்களுக்குள் மாத்திரம் 29,283 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதற்கமைய இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 33,131 பொது மக்கள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2008ம் ஆண்டு மாத்திரம் மொத்தமாக 1704 சிவிலியன்களே வருகை தந்திருந்த தாகவும் குறிப்பிட்டார். தங்களது பிடியிலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை பல்வேறு முறைகளில் தடுத்த புலிகள் தற்பொழுது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியும், துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டும் அந்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தடுக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய பிரிகேடியர் இருந்த போதிலும் மக்கள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply