பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது
நத்தார் மற்றும் புத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு அத்தியாவசியப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ் டன் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார். அதேநேரம் இக்காலப் பகுதியில் எந்தவொரு அத்தியாவசியப் பொருளுக்கும் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டு மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எம்மிடம் கையிருப்பில் இரு ப்பதாகவும் அவர் கூறினார்.
பொருட்களைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எவராவது முயற்சி செய்வாராயின் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் விசேட வேலைத் திட்டமொன்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.
பொருட்களின் விலையை அதிகரித்தல், காலம் கடந்த பொருட்களை சந்தைப்படுத்தல், பொருட்களின் நிறையைக் குறைத்து விற்றல், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தற்போது எமது கையிருப்பில், சீனி 50 ஆயிரம் மெற்றித் தொன்கள், பி வெங்காயம் 30 ஆயிரம் மெற்றித் தொன்கள், பருப்பு 20 ஆயிரம் மெற்றிக் தொன்கள், அரிசி சுமார் 3 இலட்சம் மெற்றிக் தொன்கள் உட்பட சகல பொருட்களும் உள்ளன.
இவை எமது நாட்டுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு போதுமானவை என்றும் அவர் கூறினார்.
நத்தார் மற்றும் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை லக் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 275 லக் சதொச விற்பனை நிலையங்கள் உள்ளன. நாட்டு மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை பெற்றுக் கொடுப்பதே இந்நிலையங்களின் பிரதான பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply