தமக்கான அச்சுறுத்தல், இடையூறுகள் குறித்து உடன் தலையிடுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

தமது சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல், இடையூறுகள் குறித்து அதிகாரிகள் உடன் தலையீடு செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் தமது உறுப்பினர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி ஆகியோருக்கு கடந்த நாட்களில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது சங்க உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியட்டுள்ள அறிக்கையில் வலிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அச்சுறுத்தல் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply