சீரற்ற காலநிலை காரணமாக 24 பேர் பலி: 64,116 பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதுடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் 16மாவட்டங்களில் 80,534 குடும்பங்களைச்சேர்ந்த மூன்று இலட்சத்து 64,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடைமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினாலேயே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 56677 பேர் தற்காலிக முகாம்களில் இன்னும் தங்கியிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.

நீர்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் நான்குவான் கதவுகள் நேற்று (22) திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் நீர்த்தேக் கங்களுக்கு அருகாமையில் இருக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினமும் வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply