யாழ். வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது
யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் மேற்கொண்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைககள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவர் வால்வெட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்திலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நாளைய தினம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். கிளையின் தலைவர் டொக்டர் நிமலன் நியூஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply