உலகமே அழிந்திருந்தாலும் நாடாளுமன்ற கூட்டத்தையே முதலில் நடத்தியிருப்போம்!
நாடாளுமன்றத்தை கூட்டவேண்டாம் என யாராலும் கூறமுடியாது. முக்கியமான கட்டங்களில் அமைச்சரவை தீர்மானித்தால் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்படும். உலகமே அழிந்திருந்தாலும் நாடாளுமன்ற கூட்டத்தையே முதலில் நடத்தியிருப்போம். என்று அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சட்டத்தை நாடாளுமன்றமே இயற்றுகின்றது. அவ்வற்றில் திருத்தங்களையும் செய்கின்றது. இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டவேண்டாம் என யாராலும் கூறமுடியாது. என்றும் அந்த அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டனர்.
குற்றப்பிரேரணையை அடுத்து தோற்றியுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தொடரை ஒத்திவைக்கவேண்டும். என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவித்தாரண தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் நீதிமன்றங்களோ அல்லது வேறு எந்த நிறுவனங்களோ கூடி முடிவெடுக்காது. நாடாளுமன்றமே முதன்முதலில் கூட்டப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்படும்.
திஸ்ஸ வித்தாரண அமைச்சரின் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தை கூட்டாமல் விடமுடியாது. அமைச்சரவை தீர்மானித்தால் நாடாளுமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம்.
குற்றப்பிரேரணையை விசாரித்தமையினால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும்.
தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை போலவே பரஸ்பரம் உரக்க சத்தமிட்டுக்கொண்டனர். சில உறுப்பினர்கள் ஒழுக்கமின்றி சத்தமாக பேசிக்கொண்டனர். பிரதம நீதியரசர் தெரிவுக்குழுவில் ஒரேயொரு தடவை மட்டுமே பேசினார்.
அவர் சத்தியப்பிரமானம் செய்துக்கொண்டபோது பேசியதை தவிர வேறொன்றுமே பேசவில்லை. தெரிவுக்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருடைய சட்டத்தரணிகளே பதிலளித்தனர். பிரதம நீதியரசர் அவருடைய சட்டத்தரணிகளிடமே கூடுதலான நேரம் உரையாடிக்கொண்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply