இலங்கை இந்தியாவுக்கு இடையிலான உறவு பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு மிகவும் பழமை வாய்ந்தது. அபிவிருத்தி, பாதுகாப்பு, ஒத்துழைப்பு, மனித வள அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குகிறது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அதேசமயம் பெரும் தொகையான இலங்கை இராணுவ

அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் எடுத்துக் காண்பிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், தியத்தலாவை இராணுவ கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இராணுவ அதிகாரிகளின் மரி யாதை அணி வகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட 10 பெண் இராணுவ அதிகாரிகள் உட்பட 157 இராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கேட யங்களை வழங்கினார். இதில் மாலைதீவைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களும் அடங்குவர்.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் மாலைதீவு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மட் நாஸிம் உட்பட இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரக பாதுகாப்பு உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய இராணுவத் தளபதி மேலும் உரையாற்றுகையில்,

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான உறவு பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாசார வரலாற்றுப் பின்னணியையும் கொண்டதுமாகும். இரு நாட்டு இராணுவமும் புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் செயற்படுகின்றன.

இதேவேளை இரு தரப்பினரும் தமது அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுடன், கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் இராணுவ ரீதியிலான எமது ஒத்துழைப்பை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை இராணுவப் பயிற்சிக் கல்லூரி சிறந்த ஆளுமையைக் கொண்ட இளம் இராணுவ தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே இங்கு பயிற்சிகளை முடித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்த உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ வீரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே கருதுகிறேன். இதற்கு முன்னர் இங்கு பயிற்சிகளைப் பெற்றவர்கள் சிறந்த இலக்குகளை அடைந்துள்ளனர்.

இதனை முன்மாதிரியாகக் கொண்டு பயிற்சிகளை முடித்து வெளியேறும் நீங்களும் சிறந்ததொரு நிலையை அடைவீர்களென நான் நம்புகிறேன். இளம் இராணுவ வீரர்களாகிய உங்களது பிரதான பங்கு போர் வீரனாகவும் பாதுகாவலனாகவும் கடமையாற்றுவதாகும். அத்துடன் சமாதான தூதுவனாகவும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.

உருவாகி வரும் பாதுகாப்பு அச்சுறுத் தல்களுக்கு நீங்கள் பெற்றுக் கொண்ட பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த சவால்களையும் அச்சுறுத்தல்களையும் முகம் கொடுக்க தயாராக வேண்டும். இதன் மூலம் பொது மக்களால் அங்கீகரிக் கப்படக் கூடியவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களாகவும் மாற வேண்டும். படைவீரர்கள் தமது உள மற்றும் உடல் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்திக் கொள்வதுடன்.

சிறந்த பண்புகள் உடையவர்களாகவும் மாற வேண்டும் என்றும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்தார். தியத்தலாவையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் இந்திய இராணுவத் தளபதி கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply