தான் விழுந்த குழியில் பிரதம நீதியரசரையும் தள்ள பொன்சேகா முயற்சி – விஜேயலால்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தான் விழுந்த குழியில், பிரதம நீதியரசரையும் தள்ள முயற்சிப்பதாக தென் மாகாண முதலமைச்சர் விஜேயலால் டி சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேக்கா போர் வெற்றிக்காக அவரது கடமையாக சிறப்பான பொறுப்பை நிறைவேற்றினார். முழு நாட்டு மக்களின் கௌரவத்திற்கும் பாத்திரமானார். ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் அவரை கையில் பிடித்து அரசியலுக்குள் அழைத்து வந்தன. 2009 ஆம்ஆண்டு அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.
தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ரத்துச் செய்வதாக கூறி அவர் அந்த தேர்தலில் போட்டியிட்டார். எனினும் 19 லட்சம் வாக்குகளினால் அவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் சரத் பொன்சேக்காவை அரசியல் கட்சிகள் அனாதையாக்கி விட்டனர். அவர் சிறையில் இருந்த போது, அனோமா பொன்சேக்கா, கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த காரணங்கள் இருந்தன.
தற்போது அதுவும் இல்லை. தற்போது அரசியல் அனாதையாகியுள்ள சரத் பொன்சேக்கா, பிரதம நீதியரசரையும் அந்த நிலைமைக்குள் தள்ளவே முயற்சித்து வருகிறார் என தென் மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply