கடற்பரப்பில் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
மன்னார் குடா, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற் பரப்புக்கள் அடிக்கடி கொந்தளிப்பு நிலையை அடைவதால் கடற்றொழிலில் முன்னெச்சரிக்கை யோடு ஈடுபடுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் ஜீவன் கருணாரட்ன நேற்றுத் தெரிவித்தார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப் படி, அம்பாறை, கிராந்துருகோட்டையில் 102.8 மில்லி. மீற்றர்கள் ஆகக் கூடிய மழை பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை வலுவிழந்திருப்பதால் நேற்று மழை குறைவடை ந்தது என்றாலும் இன்றும், நாளையும் மழை அதிகரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மன்னார் குடா மேல், தென், கிழக்கு கடற்பரப்புகளில் தற்போது மணித்தி யாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர்கள் வேகத்தில் காற்று வீசுகின்றது.
இது 50 – 60 கிலோ மீற்றர்கள் வரை அடிக்கடி அதிகரிக்க முடியும். அதனால் கடற் றொழிலில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply