மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியும்:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுவரும் செயற்றிட்டங்களை சார்க் நாடுகளின் பாராளுமன்ற விவகார அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர்.இச் செயற்திட்டங்களில் இலங்கைக்கு உதவ சார்க் நாடுகள் தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், இதற்குச் சகல சார்க் நாடுகளினதும் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

சார்க் நாடுகளின் பாராளுமன்ற விவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட விசேட சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்றுள்ளது. இச்சந்திப்பிற்கு வருகை தந்த எட்டு நாடுகளின் பாராளுமன்ற விவகார அமைச்சர்களையும் பாராளு மன்ற அலுவல்கள் அமைச்சர் எம். எச். மொஹமட் வரவேற்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய ‘பாராளுமன்ற ஜனநாயகத்தினூடான நல்லாட்சி’ என்ற தொனிப்பொருளில் இரு நாள் மாநாடொன்று கொழும்பில் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற் றது. இம் மாநாட்டுக்கு வருகை தந்த அமைச்சர்களே நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சார்க் நாடுகளின் தலைமைப் பதவி இலங்கைக்குக் கிடைத்த பின்னர் இடம்பெறும் சார்க் நாடுகளின் பாராளுமன்ற அமைச்சர்களின் முதலாவது மாநாடு இது வாகும். இம் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட இணக் கப்பாடுகளுக்கு அமைய சார்க் பிராந்தியத்தில் பாராளு மன்ற ஜனநாயக மூலம் நல்லாட்சியினை உருவாக்குவது தொடர்பில் 14 ஆலோசனைகளை உள்ளடக்கிய சாசன மொன்றும் நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதனை வெகுவிரைவாக பிராந்திய நாடுகளில் நடைமுறை ப்படுத்துவதற்கு எட்டு நாடுகளின் அமைச்சர்களும் இண க்கம் தெரிவித்தனர். இத்தகைய செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வந்தமைக்காக அவ்வமை ச்சர்கள் ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் சார்க் நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply