2012 ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான ஆண்டு
2012ம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறதென எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு செய்துள்ள ஆய்வில், 1995-ம் ஆண்டிலிருந்து 2012-வரையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் பத்திரிகையாளர்களும் வலைபதிவாளர்களும் ஊடக செயற்பாட்டாளர்களும் அதிகம் பாதிப்புக்குள்ளான ஆண்டும் இதுவே!
அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணியாற்றுகின்ற செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கக் கூடிய இடங்களிலேயே மிகவும் ஆபத்தானது யுத்த முனைதான்! யுத்த களத்தில் நின்று கொண்டு செய்திகளை சேகரிப்பது என்று ஒரு வகை. யுத்த களத்தில் போராளியாக நின்று கொண்டு செய்திகளை வெளியிடுவது என்பது ஒருவகை.
முந்தைய வகைக்கு சாட்சி, இலங்கையின் போர்க் குற்றங்களுக்கான நேரடி சாட்சியாக திகழ்ந்த மேரி கால்வின். இவர் இந்த ஆண்டு பலியானார்.
2-வது வகைக்கு சாட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தாலும் 2009-ல் தாம் குண்டுவைத்து தம்மையே சாகடித்துக் கொண்ட கடைசி நிமிடம் வரை புலிகளின் குரல் வானொலி மூலம் செய்திகளை கள நிலைமையை உலகுக்கு சொன்ன ஊடகவியலாளர் தி.தவபாலன். இந்த 2-ம் வகை என்பது மிகவும் அரிதானது.
குறிப்பாக 2012-ம் ஆண்டில் கொத்து கொத்தாக நூறு நூறாக மனித உயிர்கள் மரித்துப் போன சிரியா, சோமாலியா, பாகிஸ்தான் நாடுகளில்தான் அதிகளவிலான பத்திரிகையாளர்கள் பலிகொள்ளப்பட்டனர்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இணையதள செய்தியாளர்கள், இணைய வலைப்பூக்கள் நடத்துவோரும் நடப்பு 2012-ம் ஆண்டு கடுமையான அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
2012-ம் ஆண்டில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை- 89. கைது செய்யப்பட்டோர் 879 பேர். தாக்குதல் அல்லது அச்சுறுத்தலுக்குள்ளானோர் எண்ணிக்கை-1993. கடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 38. தாய்நாடுகளில் வாழ முடியாமல் அச்சுறுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்கள் எண்ணிக்கை 73! பலியான இணைய பத்திரிகையாளர்கள் 47.. கைது செய்யப்பட்டோர் 144.
பத்திரிகையாளர்களின் உயிரைக் குடிக்கின்றன ஐந்து ஆபத்தான நாடுகள் இருக்கின்றன. சிரியாவில் 2012ல் 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 4 மீடியா உதவியாளர்களும் கொல்லப்பட்டிருக்கின்றன. சோமாலியாவில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவும்செப்டம்பருக்கு பிந்தைய மாதங்களில் மட்டும் சோமாலியாவில் 7 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் 24 மணிநேரத்தில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒருவர் துப்பாக்கியால் சுட்டும் மற்றொருவர் தலை துண்டிக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவில் 18, பாகிஸ்தானில் 10, மெக்சிகோவில் 6 பிரேசிலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் சிறைவைக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தை துருக்கி பெற்றுள்ளது. 42 பத்திரிகையாளர்களும் 4 மீடியா பணியாளர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலில் 2-வது இடம் சீனாவுக்கு! 30 பத்திரிகையாளர்களும் 69 நெடிஜென்ஸ் எனப்படும் இணைய பத்திரிகையாளர்களும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். மூன்றாவது இடத்தை எரித்திரியா பெற்றுள்ளது. இந்த நாட்டில் 28 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். ஈரானில் 26 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் 21 பேர் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆஸ்திரியாவில் 1956-ம் ஆண்டு பிறந்த மேரி கால்வின் இங்கிலாந்தின் தி சண்டே டைம்ஸ் செய்தியாளராக பணியாற்றினார். இனப்போர் நிகழ்ந்த செச்சன்யா, கொசாவோ, சியாராலியோன், ஜிம்பாப்வே, இலங்கை, கிழக்கு திமோர் என அனைத்து நாடுகளிலும் தன் கால்தடம் பதித்து உண்மையை உலக்குச் சொன்னவர்.
2001-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றபோது ராணுவத் தாக்குதலுக்குள்ளாகி ஒரு கண்ணைப் பறிகொடுத்தவர். தம்மை ஜேர்னலிஸ்ட் ..ஜேர்னலிஸ் என்று கூக்குரல் எழுப்பிய போதும்தாம் தாக்குதலுக்குள்ளான கதையை விவரித்த போது இலங்கையின் போர்க்குற்ற சாட்சியாக வர்ணிக்கப்பட்டவர்.
2011-ல் லிபியா, துனிசியா, எகிப்து என அரபு புரட்சி நடந்தேறிய நாடுகளிலும் பயணித்தவர். கடைசியாக சிரிய ராணுவத்தின் தாக்குதலில் சிக்கி கால்வினும் பிரெஞ்ச் புகைப்படக் கலைஞர் ஒருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி 22-ந் திகதி பலியானார்கள். அவரது ஊடகப் பணி வளரும் ஊடக தலைமுறைக்கு ஒருபாடம்!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply