நீதித்துறை அதிகாரத்தை தனது பைக்குள் போடுவதற்கு அரசு முயற்சி – ரில்வின் சில்வா
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தனது பைக்குள் போட்டுக்கொண்டதை போன்று, நீதித்துறை அதிகாரத்தை தனது பைக்குள் போட்டுக்கொள்ளவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது எனவும் அந்த முயற்சியை மேற்கொள்ள சென்று அரசாங்கம் இன்று சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாகவும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் நீதித்துறையில் கை வைக்க போய் நீதித்துறையில் தற்போது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேசிய மற்றும் சர்வதேச கவனம் திரும்பியுள்ளது. இலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்கக் கூடிய தேவையான புறச்சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த பிரச்சினை காரணமாக இலங்கையில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி, சர்வதேச விசாரணைகளை நடத்தும் சூழல் ஏற்படும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் கொடுக்கவில்லை. எதிரணி வரிசையில் இருந்தவர்களை தம் பக்கம் இழுத்தே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பெற்றுக்கொண்டது. மக்கள் வழங்காத மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பயன்படுத்த இந்த அரசாங்கத்திற்கு தார்மீக உரிமையில்லை. வெட்டினால் நீலம், வெட்டினால் பச்சை என சிலர் கூறுகின்றனர். உண்மையில் வெட்டிப் பார்த்தல் அனைவரது இரத்ததும் ஜே.வி.பியின் சிகப்பு நிறமாகும்.
நாட்டின் விவசாயத்துறையை நிர்வகிப்பது பல்தேசிய கம்பனிகள். உரம், விதைகள் போன்றவற்றை இறக்குமதி செய்வது இந்த பல்தேசிய நிறுவனங்களே. இறக்குமதி செய்யும் விதைகளை கொண்டு மீண்டும் விதைகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியாது. இதனால் மீண்டும் விதைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த நிலைமையை உணர்ந்தோ, உணராமலோ நாட்டை கம்பனிகளின் தேவைக்கு அமையவே முன்னெடுத்து செல்கிறது எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply