புகலிடம் கோரிய இலங்கையர்கள் உள்ளிட்ட 21 பேர் தென் கொரியாவில் கைது

தென் கொரியாவில் புகலிடம் கோரி போலியான முறையில் விண்ணப்பித்த இலங்கையர்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை, பர்மா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளே குடிவரவு திணைக்களத்தால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தென் கொரியாவின் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரியாவில் தங்களுக்கு புகலிடம் பெற்றுத் தருமாறு கோரி வெளிநாட்டவர்கள் முகவர்களிடம் பணம் செலுத்தியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

1997ம் ஆண்டு 12 பேரும் 2004ம் ஆண்டு 100க்கு குறைவானவர்களும் 2011ம் ஆண்டு 1000 பேரும் தென் கொரியாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply