தமிழக இலங்கை அகதிகளுக்கு 2500 வீடுகள்: 9 மாதத்தில் கட்டிமுடிக்க உத்தரவு
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள 21 முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு 2500 வீடுகள் கட்ட தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது. கோவை, திண்டுக்கல், கன்னியாகுமாரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.1 லட்சம் செலவில் இந்த வீடுகள் கட்டப்படுகிறது. அதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் ஒவ்வொன்றும் தலா 200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. இதற்கான பொறுப்பு மாநில கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துரைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர்கள், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரிய மானேஜிங் டைரக்டர் ஆகியோருக்கு பொதுப்பணித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் அகதிகள் முகாம்களில் ஏற்கனவே இருக்கும் வீடுகளை இடிக்காமல், காலி இடங்களில் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும். அவை ´இந்திரா அவாஸ் யோஜனா´ திட்டத்தின் கீழ் கட்டப்படுகின்றன. அனைத்து கழிப்பறை வசதிகளுடன் இருக்க வேண்டும்.
புதிதாக கட்டப்படும் வீடுகள் அடங்கிய குடியிருப்பு பகுதியில் ரோடுகள், சாக்கடை, தெரு விளக்குகள் போன்ற பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அடிப்படை வசதிகளை மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செய்து தரவேண்டும்.
இந்த வீடுகள் 9 மாதத்தில் கட்டி முடிக்கப்பட உள்ளது. எனவே இப்பணியை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வாரந்தோறும் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அதன் அடிப்படையில் அகதிகளுக்கு ரேசன் கார்டுகள் வழங்கப்படும். புதிய வீடு கிடைத்தவர்கள், பழைய வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply