வன்னியிலிருந்து படுகாயமடைந்து திருமலைக்கு கொண்டுவரப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். முதல்வர் சந்திரகாந்தன்
கடந்த நான்கு நாட்களாக வன்னி நிலப்பரப்பின் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல் காரணமாக படுகாயம் அடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு, அவர்களை கடல் மார்க்கமாக திருகோணமலைக்கு இன்று காலை கொண்டுவந்தனர். இதில் சுமார் 368 பேர் அடங்குகின்றார்கள். இவர்களில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்று அம் மக்களைப் பார்வையிட்டு, அவர்களது சுகம் விசாரித்தார். இதன் போது முதலமைச்சர், திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய நிருவாகம், ஆளுனர், அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமுரிய சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டு மேலதிக சிகிச்சைக்காக அவர்களை கொழும்பு மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பாகவும் மேலும் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும் 160 பேர் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும், மேலும் இங்கு சிகிச்சை பெறுகின்ற மக்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை முதலமைச்சர் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply