ஒசாமா பின்லேடனிடம் லஞ்சம் வாங்கிய பாகிஸ்தான் அதிகாரிகள்

அல்-கொய்தா இயக்கத் தலைவன், ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் வசித்துவரும் அபோட்டாபாத் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க சீல் கமாண்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். பலத்த இரும்பு வேலி, 14 அடி உயர மதில் சுவருடன், பாதுகாப்பாக ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த அந்த 3 மாடிகள் கொண்ட வீட்டை கட்டுவதற்காக, ‘பட்வாரி’ எனப்படும் கிராம கணக்குப்பிள்ளைக்கு, ஒசாமா ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒசாமா கொல்லப்பட்ட பின்னர், அந்த வீட்டில் கிடைத்த டைரியில்,  இந்த லஞ்ச பட்டுவாடா குறித்த செய்தியை ஒசாமாவே தன் கைப்பட எழுதி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அநத் கணக்குப் பிள்ளையை கைது செய்து விசாரித்த போது, அந்த வீட்டை 14 அடி மதில் சுவற்றுடன் கட்ட அனுமதி அளிப்பதற்காக லஞ்சம் வாங்கிய தகவலை ஒப்புக்கொண்டதாகவும், லஞ்சம் கொடுத்தது ஒசாமா என்பது எனக்கு தெரியாது என்று கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது வாடிக்கைதான் என்பதால், ஒசாமாவும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்திருக்கக் கூடும் என கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply