பாலி ஆறு பெருக்கெடுத்து மன்னார் – யாழ். ஏ-32 வீதி போக்குவரத்து பாதிப்பு
மன்னார் பாலி ஆறு பெருக்கெடுத்துள்ளதால் மன்னாரில் இருந்து சங்குப்பிட்டி – பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்லும் பாதையூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஏ-32 வீதியில் ஆங்காங்கே நீர் நிரம்பியோடுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனால் மன்னாரில் இருந்து பயணிகள் போக்குவரத்து பஸ்ஸில் செல்லும் நபர்கள் இழுப்பக்கடவை எனும் இடத்தில் இறக்கப்பட்டு உலவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு பாலி எனும் இடத்தில் இறக்கப்பட்டு மீண்டும் யாழ். நோக்கி பஸ்ஸில் பயணம் செய்கின்றனர்.
உலவு இயந்திரத்தில் ஏற்றப்பட்டும் ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 150 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.
ஏ-32 வீதியை அண்மித்துள்ள தேத்தாவானி என்ற கிராமத்துக்கான தரைவழி போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள 30ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர சேவையை வழங்கவென சிறிய ரக படகொன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply