இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது – அசோக் மெத்தா

இலங்iயில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என முன்னாள் இந்திய சிரேஸ்ட இராணுவ மேஜர் அசோக் மெத்தா தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் நல்லிணகத்தை ஏற்படுத்துவதன் மூலமே, இராணுவ வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதுடன், நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டு காலப்பகுதியில் வடக்கில் பாரியளவு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படையினரின் பெரும் பகுதியினர் வடக்கிலிருந்து அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply