ஜனாதிபதி மகிந்தவுக்கு பாரதரத்னா விருது வழங்குமாறு சுப்ரமணியம் சுவாமி மீண்டும் வலியுறுத்தல்
இலங்கைக்கு இந்திய இராணுவம் பயிற்சிகளுக்காக அனுப்பப்படுவதை, இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். கோயமுத்தூரில் நேற்ற இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கையுடன் பல்வேறு வழிகளில் நட்புறவை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கம், சிங்களவர்களுக்கும் ஒரே மரபணுக்களே உள்ளன.
புறானகாலத்தில் இராவணனும் வடஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தனர் என்று சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையுடன் நட்புறவினை அதிகரித்துக் கொள்ள இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் அதிகாரப்பகிர்வுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றும்வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply