அனுர பிரியதர்சன யாப்பா மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் – லக்ஷ்மன் கிரியெல்ல
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் சொல்லுகின்றார். என்று தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிரணி உறுப்பினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தெரிவுக்குழுவின் தலைவர் வேண்டுமென்றே ‘முற்றிலும் தவறான அறிக்கைகளை’ முன்வைத்துள்ளார். இது ‘நகைப்பூட்டுவதாக’ அமைந்துள்ளது. என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தெரிவுக்குழுவின் செய்பாடானது ஆரம்பத்தில் இருந்தே பக்கசார்பானதாக இருந்தமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அக்குழுவிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எனினும் தெரிவுக்குழுவின் செயல்முறை பாரபட்சமற்றது வெளிப்படையானது என்று அக்குழுவின் தலைவர் அமைச்சர் யாப்பா வலியுறுத்தி கூறுவது நகைப்பூட்டுவதாக அமைந்துள்ளது.
பிரதம நீதியரசரை சித்திரவதை செய்யவேண்டும் என்பதில் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்தது. தமது பெரும்பான்மை அதிகாரத்தை பயன்படுத்தி குழுவிற்கு எழுத்துமூலமான மற்றும் வாய்மூல சாட்சிகளை முன்கூட்டியே தயாரித்துக்கொண்டது என்றார்.
எதிர்க்கட்சியின் உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவிக்கையில், இந்த தெரிவுக்குவானது பாரபட்சமானது .அதன்மீது நம்பகத்தன்மை இல்லை. இந்த குழுவின் செயற்பாடானது முற்றிலும் ஒரு பக்கச்சார்பான செயலாகும். அதனால் தான் அக்குழுவில் இருந்து எதிரணியினர் வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசாங்க தரப்பினரோ பிரதம நீதியரசரை நீக்கிவிடவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
பிரதம நீதியரசரிடம் 1000 க்கும் மேற்பட்ட பக்கங்கங்களை கொண்ட ஆவணங்களை கையளிக்கப்பட்டன. என்பதுடன் தெரிவுக்குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையானது முற்றிலும் தவறானதாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply