மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை: 20, 250 பேர் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக 5 ஆயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்டென்லி டி மெல் தெரிவித்தார். மழை, வெள்ளம் காரணமாக முழுமையாக தமது வீடுகளை இழந்த 2 ஆயிரத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 23 பேர் 98 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மல்வத்து ஓயா பெருக்கெடுத்து சுமார் 18 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக மன்னார், நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய 5 கிராம செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply