வெலிக்கடை சிறை கைதிகளிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றது அம்பலம்
நேற்று (27) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற நூற்றுக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் அங்குள்ள கைதிகளிடம் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதாக தெரியவந்துள்ளது. இந்தச் செயலானது சிறைச்சாலையில் இடம்பெறும் மோசடிகளை மூடிமறைக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இழிவான வழிமுறை என முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தேசிய செயற்பாட்டுக்குழு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டவர்கள் இணைந்து கைதிகளிடம் பலாத்காரமாக வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றமை ஜனநாயக விரோத செயல் எனவும் இதன்மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கையில் பாரிய சந்தேகம் ஏற்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை கைதிகளின் உயிருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் அரசு அதனை செய்ய பல தடவைகள் தவறியுள்ளதென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply