புலம்பெயர் தமிழர்களின் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு உத்தரவு
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கடும் அழுத்தங்களை கொடுப்பதற்காக வெளிநாடுகளில் வாழும் ஈழ ஆதரவாளர்களான தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை இலங்கை அரசாங்கம் முறியடித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு அரசாங்கம், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த ரகசியமான திட்டத்தின் ஊடாக வெளிநாடுகளில் உள்ள 10 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன.
இரண்டு பெரிய கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க போதிய பெருபான்மை பலத்தை வழங்காது, இரட்டை குடியுரிமை மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவதே இதன் பிரதானமான நோக்கம் எனவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply