அப்பாவி மக்கள் மீதான புலிகளின் தாக்குதலை சமாதானத்தை விரும்பும் அனைவரும் கண்டிக்க வேண்டும்:துலிப் டி சிக்கேரா

நிர்க்கதியான அப்பாவி வன்னிச் சிவிலியன்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை சமாதானத்தை விரும்பும் அனைவரும் கண்டிக்க வேண்டுமென கொழும்புப் பேராயர் துலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார்.
 சுதந்தன்புரம் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் தப்பிச் செல்ல முற்பட்ட சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் போன்றவை கண்டிக்கத் தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்ச் சிவிலியன்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அப்பாவிச் சிவிலியன்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான தாக்குதல்களின் மூலம் எவ்வித நன்மையும் கிட்டப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply