வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் நடத்திய பிரபாகரனுக்கு உரிய தண்டனை கிடைக்கும்:மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முல்லைத்தீவில் 15 கி.மீ.க்கும் குறைவான பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், 25 ஆண்டுகால போருக்கு விரைவில் முடிவு கட்டப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் புதன்கிழமை பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:
கடந்த 25 ஆண்டு காலமாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கண்டியில் உள்ள புத்தரின் புனித பல் வைக்கப்பட்டுள்ள பெளத்த கோயில், ஸ்ரீ மகா போதி கோயில் உள்ளிட்ட பல வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் பிரபாகரன் உரிய தண்டனையை பெற்றே ஆகவேண்டும்.
புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.
இந்த தேர்தல் வெற்றி வாயிலாக போர் வீரர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
6 ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்: இலங்கையின் மத்திய மாகாணத்தில் 250 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தமிழ் வழி பள்ளிகளுக்கு 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மஹிந்த ராஜபக்ஷ.
பிரபாகரன் தப்ப முடியாது: “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கு குழியில் மறைந்திருந்தோ அல்லது ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கோ மாறி மாறி உயிர்த்தப்பி வருகிறார். இருப்பினும் அவர் நாட்டை விட்டு தப்பமுடியாது’ என்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply