காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங்: சோனியா அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் மன்மோகன் சிங்கைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் போவதாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் இந்த அறிவிப்பின் மூலம் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக நிலவிவந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் வழமைக்குத் திரும்பி தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவித்திருக்கும் சோனியா காந்தி, மன்மோகன் சிங் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் மிக நீண்டகாலம் உழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மன்மோகன் சிங் சிறந்த முறையில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதுடன, இளைய தலைமுறையினரின் மத்தியில் ஒரு தூண்டுகோலாகச் செயற்படுவாரெனவும் சோனியா காந்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகத்தைத் தெரிவு செய்வதற்கான பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதக் கடைசிக்கும் மே மாதத்தின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply