மக்களின் தேவைகளுக்கே முன்னரிமை: ஜனாதிபதி

பாதிப்படைந்திருக்கும் வன்னி மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் தமது அரசாங்கம் முன்னுரிமையளிக்குமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  
 
இராணுவ நடவடிக்கைகள் மூலம் 95வீதமான நிலப்பரப்பினை மீட்டெடுத்திருப்பதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் சில நாள்களில் முற்றுமுழுதாக வன்னிப் பகுதி விடுவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், வன்னி மக்களுக்கு நிரந்தரத் தீர்வினை அரசியல் ரீதியாகக் காணவேண்டுமென்பதில் தான் உறுதியாகவிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
அத்துடன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ளவேண்டுமெனவும் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதேவேளை, வன்னிப் பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர் அங்கு நிரந்தர சமாதானத் தீர்வொன்றை ஏற்படுத்தும்; வகையில், தமிழகக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள இலங்கை ஜனாதிபதி திட்டமிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தப் பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உட்பட, 
ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply