சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் 12.02.2009.இல் தீக்குளித்து இறந்த தமிழ் இளைஞரின் மரணமானது புலிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகும்.
வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான கடைசிகட்ட போரை நிறுத்துவதகாக புலி இயக்கத்தால் திட்டமிட்டு செய்யப்படுவதுதான் இந்த தீக்குளிப்பு போராட்டமாகும். இந்த தீக்குளிப்பு போராட்டமானது கிட்டதட்ட வன்னியில் உள்ள அப்பாவி இளஞர்களை மூளைசலவை செய்து தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு சமமானதாகும்.
ஈழத்தமிழருக்காக தமிழ் நாட்டில் எதோட்சையாக தலை நகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் எனும் இளைஞர் 29.01.2009இல் தீக்குளித்து தற்கொலை செய்துண்டார். இந்த தற்கொலை சம்பவமானது உலக தமிழர்கள் எல்லோரினதும் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டது. இந்த முத்துக்குமார் என்பவர் கூட எதோட்சையாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்று நூறு வீதம் சொல்லிக்கொள்ள முடியாது. ஏன் என்றால் இவர் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் ‘பெண்ணே நீ” என்ற மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்துள்ளார். அதே நேரம் இவர் தீக்குளிப்பதற்கு முன்பு 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை தயார் பண்ணிவைத்து விட்டுதான் தீக்குளித்திருக்கிறார்
முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவம் ராமதாசால் காசுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம். தமிழ் நாட்டை பொறுத்தவரையில் குடும்ப கஸ்ரத்தின் காரணமாக பணத்துக்காக உயிர்களை விடுவதற்கும் கிட்னிiயை விற்பதற்கும் முத்துக்குமார் போன்று நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். அவர்களை தமிழ் நாட்டில் உள்ள புலியாதரவு அரசியல் உதிரி கட்சிகள் பணத்தின் மூலம் கவர்ந்திழுத்து இப்படியான தீக்குளிப்பு போன்ற சம்பவங்களை நடத்தியிருக்கலாம்.
எது எப்படியோ முத்துக்குமாரின் தீக்குளிப்பு சம்பவமானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டதால் புலி இயக்க தலமையானது இதைபோன்ற சம்பவங்களை பல்வேறு நாடுகளிலும் தொடர்வதற்கு முடிவெடுத்து விட்டது. புலிகளை பொறுத்தவரை எப்படியாவது போரை நிறுத்தி தங்களின் இருப்பை வன்னியில் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்பதே இன்றைய முக்கிய தேவையாகும் அதற்காக எவ்வளவு பணத்தையும், எவ்வளவு உயிர்களையும் இழப்பதற்கு தயாரான நிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
மலேசியாவில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞா.; (ராஐh, வயது 27) ஒருவர் கடந்த 09.02.2009 அன்று தீக்குளித்து இறந்தார். இவரும் தனது நாட்குறிப்பில் ‘உலகத் தமிழர்களை நம்பி நான் தீக்குளிக்கிறேன், இலங்கையில் தமிழ் மக்களை உடனே காப்பாற்றவும், அமெரிக்க அரச தலைவர் ஒபாமா இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்யவும்” என தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டு ராஜா தீக்குளித்துள்ளதாக புலி இணைய தளங்களில் அந்த இளஞரின் படமும் போட்டு பிரசுரித்திருந்தார்கள். ஆனால் இலங்கையில் எங்கு பிறந்தார், இலங்கையில் எங்கு இருந்தார் என்பன போன்ற எந்த விபரங்களையும் புலி ஊடகங்கள் குறிப்பிட்டு காட்டப்பபடவில்லை. வெறுமனனே இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் இறந்தவரின் படத்தையும் அவர்; எழுதிவைத்த மரணசாசணத்தையும் பிரசுரித்துக் காட்டிய புலி ஊடகங்கள் மற்றைய விபரங்களை மட்டும் ஏன் பிரசுரிக்கவில்லை? மலேசியாவில் தீக்குளித்து இறந்த இந்த இளஞரும் புலிகளின் தற்கொலை படையணியில் தயார் செய்யப்பட்ட (மூளை சலவை) ஒரு நபராகதான் இருக்கவேண்டும்.
அடுத்ததாக முக்கியான தீக்குளிப்பு தற்கொலை சம்பவமாக புலிகளால் மிகவும் திட்டமிட்டு செய்யபட்ட சம்பவமானது 12.02.2009 வியாழக்கிழமை இரவு 20.20 மணிக்கு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவரை தீக்குளிக்க வைத்து மரணமடைய வைக்கப்பட்டதாகும்.
ஐ.நா. சபையின் முன்னால் நடந்த சம்பவமானது வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த செய்தியானது சுவிஸில் உள்ள ஊடக துறையினருக்கே வெள்ளிகிழமை மாலைதான் தெரிய வந்துள்ளது. ஆனால் வெள்ளிகிழமை விடிய காலையே இந்த தீக்குளிப்பு சம்பவத்துக்காக ஐ.நா.சபை முன்றலில் கூடும்படி பல சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சுவிஸ் புலி இயக்க முகவர்களால் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டு வெள்ளிகிழமை மதியமே நூற்றுகணக்கானோர் ஐ.நா.சபை முன்பாக கூடி தீக்குளித்து இறந்தவருக்கு புக்கள்செண்டுகள் வைக்கபட்டு பேரணி நடத்தியுள்ளார்கள். புலி முகவர்களுக்கு எப்படி தெரியும் ஐ.நா.சபை முன்னால் தமிழர் ஒருவர் தீக்குளித்து இறந்துவிட்டார் என்று. அதுவும் ஐ.நா.சபை முன்னால் தீக்குளிகப்போனவர் தனியாக போனதாகவும் இருவு 8.20மணிக்கு தீக்குளித்ததாகவும் சுவிஸ் தெலைகாட்சியில் வெள்ளிகிழமை மாலை நேரசெய்தியில்தான் அறியக்கூடியதாக இருந்தது. அப்படியிருக்க வெள்ளிக்கிழமை விடியக்காலையே சுவிஸ் வாழ் புலி முகவர்களுக்கு எப்படிதெரியும் இந்தசெய்தி.
சுவிஸ் நாட்டை பொறுத்தவரை ஒருவர் இறந்தாலே அல்லது கைது செய்யப்பட்டாலோ அவரின் இரத்த சொந்தகாரர்கள் மூலமாகதான் அவரின் தகவல்களை சுவிஸ் பொலிசிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதுவும் இப்படியான தீக்குளிப்பு போன்ற தற்கொலை சம்பவங்களால் இறப்பவர்களை பற்றி தகவல்கள் இறப்பவரின் இரத்த உறவுகளை தவிர வேறு நபர்கள் யாருக்குமே எந்த தகவல்களையும் பெலிசார் வழங்கமாட்டார்கள். அப்படியிருக்க இறந்தவர் பற்றிய விபரங்களை சுவிஸ் பொலிசாரே சரியான விபரங்களை இன்னுமே அறிந்திராத பட்சத்தில் புலி ஊடகங்களுக்கு (புதினம்) எப்படி கிடைத்தது இறந்தவரின் படங்களும், அவர் எழுதிவைத்திருந்த மரணசாசண பற்றிய விபரங்களும்?
இவைகள் புலி ஊடகங்களில் வெள்ளிகிழமை மதியமே பிரசுரிக்கப்பட்டன.
இறந்தவர் எழுதி வைத்துள்ளதாக புலி ஊடகங்களில் காட்டப்படும் மரணசாசணத்தில் அதில் குறிபிட்ட நபரின் முகவரி குறிப்பிடபடவில்லை. வெறுமனே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் நாட்டின் முகவரியில் வசிப்பதாகவே எழுதப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் கையால் எழுதப்படவில்லை. கணனியில் ஒழுங்கமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரணசாசனத்தில் உள்ள திகதி 12.02..2009. என்று குறிப்பிடபட்டுள்ளது. தீக்குளித்தவர் 12.02.2009 அன்றுதான் தீக்குளித்துள்ளார். இந்த ஏழுபக்க கடிதம் சுவிஸில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. 12.02.2009இல் தீக்குளிக்க போகின்றவர் 12.02.2009 இல் இவ்வளவு ஒரு நீண்ட மடலை கணனியில் எழுதி வடிவமைத்திருக்க மாட்டார். இது ஏற்கனவே தயாரிக்கபட்ட மடலாகும். இதெல்லாம் திட்டமிட்டு செய்யபட்ட காரியங்களாகும். இந்த மடலை தயாரித்துக்கொடுத்தவர் ஒரு பிழைவிட்டிருக்கிறார் என்னவென்றால் லண்டன் நாட்டின் முகவரியில் இருப்பதாக குறிப்பிடுகிறார். லண்டன் ஒரு சிற்றியாகும் அது நாடல்ல. பிரித்தானியா என்ற நாட்டிக்குள் இருக்கும் சிற்றிதான் லண்டனாகும்.
முருகதாஸால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் மரணசாசணம் வெளிநாட்டில் உள்ள புலி முகவர்களால் தாயாரிக்கப்பட்டு முருகதாஸை தீக்குளிக்கவைத்து அவரின் படத்துடன் பிரசுரித்து படம் காட்டியிருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட புலி இயக்கத்தின் செயலாகும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சுவிஸ் பொலிசார் இதை பற்றி முழுமையாக விசாரிப்பார்கள் என நம்புகிறோம். அப்பொழுது இந்த செயல்களின் சூத்திரதாரிகள் கட்டாயம் கைதுசெய்யப்படுவார்கள். அப்பொழுது உண்மை வெளிவரும். இதோடு புலி இயக்கத்துக்கு சுவிசில் மரணசாசணமும் எழுதப்படலாம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply