கடற்படைக்கெனத் தனியான வான்படைப் பிரிவிவொன்றை உருவாக்கவேண்டுமாம்

கடற்படைக்கெனத் தனியான வான்படைப் பிரிவிவொன்றை உருவாக்கவேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேர தெரிவித்துள்ளார். 
 
வான் பாதுகாப்பில் வெறுமனனே விமானப்படையில் மாத்திரம் தங்கியிருக்கக் கூடாதெனவும், கடற்படையும் தனியான வான்படைப் பிரிவொன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை வான் பாதுகாப்பு உட்பட தனது அனைத்து வழிகளிலுமான பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், எனினும், விமானப் படையினரின் பலத்தைத் தான் குறைத்து மதிப்பிடவில்லையெனவும் கூறினார்.

படையினரை ஏற்றி இறக்குவது உள்ளிட்ட சில விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வான்படைப் பிரிவொன்றை கடற்படைக்கென உருவாக்கவேண்டும் என நான் கருதுகிறேன். எல்லாவற்றுக்கும் விமானப்படையினரில் தங்கியிருக்க முடியாது” என கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் விமானப்படைத் தளபதி கொண்டர் ஜென்ரல் ஹமில்டன் வனசிங்க, பொதுமக்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply